தவெக அரசின் முதல் முதலீட்டாளர் மாநாடு… கையெழுத்தான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தின் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க முடியும். அதனடிப்படையில் தவெக அரசு பெறுப்பேற்று இது வரைக்கும் ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்துள்ளது .

இந்த நிலையில், சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கி வைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு புதிய நிறுவனங்களோடு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு முதலீட்டாளர்களிடமும் நிறுவனங்களின் தேவைகள் குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமைய உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *