
சுதந்திர தினவிழாவில் அரங்கேறியது வெட்கம்கெட்டத்தனம் என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் 80வது சுதந்திர தினவிழா இன்று (ஆக.15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டையில் முதல் முறையாக தவெக தலைவரான முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வில் அவரின் பெற்றோர்களான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை த்ரிஷா அவரது அம்மாவுடன் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினவிழாவில் இன்று நடந்தது வெட்கம்கெட்டத்தனம் என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம் கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான் .நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று பதிவிட்டுள்ளார்.



