கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது பட்ஜெட்டும் இரண்டாம் நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. மேலும் நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது திமுக, அதிமுக சார்பில் கோவை மாணவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இந்த நிலையில் சட்டப்பேரவை இன்றைய (ஆக.18) கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கர்நாடகாவின் அன்னூர் அருகே தமிழர்கள் 3 பேர் அம்மாநில அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், சட்டமன்ற பேரவை விதி 55-ன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக முன்மொழியப்படுவதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

திமுக
இந்த தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்ஏ மனோஜ் பாண்டியன் பேசுகையில், “கர்நாடகா வனப்பகுதியில் 3 மிழர்கள் கால்நடைகளை தேடிச் சென்ற போது அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கர்நாடகாவில் தற்போது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் முற்றிலும் மனித உரிமை மீறலாகும். இது ஃபேக் என்கவுண்டர். உயிரிழந்த தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இதுத்தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஃபேக் என்கவுண்டருக்கு நீதி விசாரணை தேவை. இது சாதாரணமான பிரச்னை அல்ல. தமிழர்களுக்கான பிரச்னை. இந்த விவகாரத்தில் தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிற்கு தமிழ்நாடு அரசு ஏதேனும் கடிதங்களை அனுப்பியுள்ளதா? தமிழர்களை சுட்டுக் கொன்றவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ கர்நாடகாவில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் 3 கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய சதி இருப்பதாக உயிரிழந்தவர்களின் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மையை வெளிகொண்டு வர முடியும். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அறிவித்துள்ள 5 லட்சம் நிவாரண நிதி போதுமானது அல்ல. அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதியுதவியை வழங்க வேண்டும். இந்த பிரச்சனையின் உண்மை நிலையை தமிழ்நாடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது” என்று கூறினார்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், “ இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட். இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் உள்பட பலர் பேசினர்.

அமைச்சர் நிர்மல்குமார்
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “சம்பவத்தன்று கர்நாடக வனத்துறையினரின் வேட்டை தடுப்பு நடவடிக்கையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு இடைக்கால நிவாரணத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் வழங்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், முறையான நீதி விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் முதலில் சுட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்து, இச்சம்பவம் குறித்து கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை அமைத்து, தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளை கர்நாடகா அரசு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணையும் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் ஒரே நம்பிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மட்டும்தான். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரலாக முதலமைச்சர் விஜய்யின் குரல் கண்டிப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *