பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து விவகாரம்: திமுக வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து பேச அனுமதி மறுத்ததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஆக.24) நடைபெற்றது. அப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர், திமுகவினருக்கு பேச வாய்ப்பு மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், “110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்துப் பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது“ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் காரணமாக திமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அனைவரும் வெளியே சென்று கோஷம் எழுப்புங்கள் என்று சபாநாயகர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *