
சூர்யா நடித்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் 12 நாட்களில் உலக அளவில் ரூ.189 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து வெளியான படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் கடந்த 12 நாட்களில் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ. 189 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 52 கோடியும் வசூலித்துள்ளது.



