பிளஸ் 1 மாணவி தற்கொலை: ஆசிரியரை கைது செய்யக்கோரி மதுரையில் போராட்டம்

மதுரையில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரை சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்தவர் அந்திஸ்வரன். இவரது ஆனந்த லெட்சுமி. இந்த தம்பதியின் 16 வயது மகள் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரை ஆங்கில ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் நேற்றிரவு (ஆகஸ்ட் 26) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறப்பதற்கு முன் தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்த மாணவி பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற நிலையில் தற்போது படிப்பில் பின் தங்கியதாலும், மேலும் மாணவர் ஒருவரை காதலித்து அவரது பெயரை நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவியை ஆசிரியர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாரின் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளியை இன்று(ஆகஸ்ட் 27) முற்றுகையிட்டனர். சம்பந்தபட்ட ஆங்கில ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ,மாணவி தற்கொலை குறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *