
மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த வேல்ஸ் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தனர். புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று (ஆகஸ்ட் 28) இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலையில் மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்த காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைகுப்புற கவிழ்ந்தது. இதையடுத்து காயமடைந்த 7 மாணவர்களும் மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ராமு, தீபக்,ராஜூ, ஹரீஷ் என்ற 4 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 3 மாணவர்களும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



