
தமிழ்நாடு சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், “ இங்கு காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் துரோகம் செய்தவன் எல்லாம் நம் ரத்த சொந்தமாக இருக்கிறான். தமிழனுக்கு வீரமும், மானமும் உடன் பிறந்தது போல துரோகமும் உடன் பிறந்திருக்கிறது. நம் பாட்டனுக்கும் பாட்டிக்கும் துரோகம், உடன் பிறந்தவன் ரத்த துரோகம் தமிழன் ஆள வேண்டும் என சொல்லவில்லை, புரட்சித் தமிழாய்ந்த தமிழ் மகன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.
தமிழைப் பார்த்து படிக்கும் போதே 10, 20 தவறுகள் வருகிறது. இந்த இனத்திற்கு எவ்வளவோ பிரச்னைகள் வந்துள்ளது போராடியிருக்கோம். சர்க்கார் பட நோட்டீஸை கிழித்தது தான் சர்வதேச பிரச்சனை என்கிறார்கள். மீனவனை சுட்டால், காவிரி நீர் மீட்கப்படவில்லை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்தது. ஆனால், ‘சர்க்கார்’ போஸ்டர் மட்டும் தான் நமது பிரச்னை என்பது போல உள்ளனர்.
சட்டமன்றம் தியேட்டர் போல உள்ளது; சட்டமன்றத்தில் ‘ஆல் இஸ் வெல்’ சொல்லுனு சொல்றாங்க. உங்களை தற்குறி என கூறுவதே பெருமைக்குரிய வார்த்தை. காமராசர் பல்கலைகழக கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என பேசுகிறார்கள். முதலமைச்சரை பார்க்க லெட் (LED) வேண்டும் என்கிறார்கள், அதையும் ரசிக்கிறார்கள், சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போலவே உள்ளது. அருமையான எண்டர்டெயிண்மெண்டாக இருக்கிறது. மேட்டூர் அணையைக் கட்ட அந்த காலக்கட்டத்தில் 10 கோடி தான் செலவாகிருக்கும், ஆனால், தண்ணீரைத் திறக்க செல்ல 6 கோடி செலவாகிறது” என்றார்.



