மதுரை பாதாளச்சாக்கடை சீரமைப்புக்கு ரூ.2,400 கோடி: விஜய் அறிவிப்பு

மதுரை பாதாளச்சாக்கடை சீரமைப்புக்கு ரூ.2,400 கோடி: விஜய் அறிவிப்பு

மதுரையில் பாதாளச் சாக்கடை அமைப்பை சீரமைக்க ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று (செப்டம்பர் 2) நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு உறுப்பினரின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் நகராட்சி நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நவீன பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாளச் சாக்கடை அமைப்பை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ. 960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ. 236 கோடி செலவிடப்படும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ. 1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை ரூ. 110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ. 275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும். பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ. 130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவிலும், மொத்தம் ரூ. 305 கோடி செலவில் அமைக்கப்படும்.

புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும். உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி செலவிடப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *