
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பேசுகையில், “1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்” என்று அறிவித்தார். இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு பட்டியலில் இருந்தன.
இந்த நிலையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி, அரசு வருவாய் துறை ஆகியவற்றுக்கு சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் புதிய தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று(செப்டம்பர் 9) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



