தவெக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்: நடிகர் ஜெய் பேட்டி

தவெக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக நடிகர் ஜெய் கூறினார்.

நடிகர் விஜய்யுடன் ‘பகவதி’ படத்தில் இணைந்து நடித்தவர் நடிகர் ஜெய். ‘சுப்ரமணியபுரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள ஜெய், தவெக ஆதரவாளர் ஆவார். முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழா மேடையில் காட்சி தந்த விஜய், தற்போது தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த நடிகர் ஜெய், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் தவெக நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது.

தவெக ஆட்சியில் நடைபெற்ற மாற்றங்கள் பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறாத தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்பதற்கான மாதிரி தான் இது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினர். ஒருசில இடங்களில் பொதுமக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆனால் தவெக அரசின் நூறு நாள் ஆட்சியை பார்த்தபிறகு அவர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *