தேர்தல் பிரசாரத்திற்காக மக்களை வதைப்பதா?: விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்

தேர்தல் பிரசாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு எந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை வெளியிடடுள்ளார். அதில், “ முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் ஒருநாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள், பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்த சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரசாரத்துக்காக பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேரம் சிரமத்தை ஏற்படுத்துவது எந்தவகையான
மக்களாட்சி?

மக்களைச் சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்து கொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரசாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு எந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *