
10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (அக்.14) வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “ 2026–2027-ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு 03.03.2027 தொடங்கி 29.03.2027-ம் தேதியுடன் நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வு 08.02. 2027 அன்று தொடங்கி 18.02.2027 வரை நடைபெற உள்ளது. பதினொன்றாம் வகுப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 05.03.2027 அன்று தொடங்கி 01.04.2027 வரை தேர்வு நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு 19.02.2027 தொடங்கி 26.02.2027 வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு 17.03.2027 தொடங்கி 12.04.2027 வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 07.05.2027 அன்றும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் 20.05.2027 அன்றும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



