அனிருத் ரவிச்சந்தர், காவியா மாறன் திருமணம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், காவியா மாறன் திருமணத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினர் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ் வைத்துள்ளனர்.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நவம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நவம்பர் 21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் அனிருத், காவியா குடும்பத்தினர் முக்கிய விஐபிகளுக்கு நேரில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்து வருகின்றனர். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தரின் பெற்றோர் லட்சுமி, ரவிச்சந்தர் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட பலருக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.

இந்த நிலையில் தனது பேத்தி காவியாவின் திருமணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான வெளியிட்டுள்ள அழைப்பில், “ வரும் 2026 நவம்பர் திங்கள் 21-ம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, எனது அன்புப் பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா- முரசொலி மாறன் பெயர்த்தியும், காவேரி – கலாநிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாநிதி மாறனுக்கும் லட்சுமி – ரவிச்சந்தரின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *