வங்கக்கடலில் 24 மணி நேரத்தில்‘ முரசு’ புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ‘முரசு’ புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் – நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08:30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் – நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும். பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.2-ம் தேதி அன்று மாலை வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியைச் சென்றடையக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த புயலுக்கு ‘முரசு’ என்கிற பெயர் சூட்டப்படும் எனத் தெரிகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *