
விபத்தில் உயிரிழந்த நடிகை ஹர்ஷில் காலியா.
நடிகை ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நடிகை ஹர்ஷில் காலியா(30). மாடலிங் அழகியான இவர் ‘கிரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத்தொடரிலும், பல ராஜஸ்தானி இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹர்ஷில் காலியா
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் தனது வேலையை முடித்து விட்டு ஹர்ஷில் காலியா ஷிப்ரா பாத் சாலையில் இரவு 11:30 மணியளவில், அவர் தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள், உடனடியாக காரில் இருந்த ஹர்ஷில் காலியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த ஹர்ஷில் காலியா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஷிப்ரா பாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோவை கைப்பற்றிய போலீஸார், கார் அதிவேகமாகச் சென்றதா அல்லது வேறொரு வாகனம் அவரை முந்திச் செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்துக் ஆய்வு செய்து வருகின்றனர். அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விபத்து ஏற்பட்ட போது நடிகை மது போதையில் இருந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



