
2 தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி என்றும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் போட்டியிடுவார்கள்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் கே.மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் பி.சத்யபாமா ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், தவெக சார்பில் மீண்டும் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



