ஈரான் மீதான தாக்குல்களை கண்டிக்க வேண்டும்: ராகுல் கேள்வி!

ராகுல் காந்தி

ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” உலகில் இந்தியாவின் அந்தஸ்தை மவுனம் குறைக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதங்கள் பலவீனமான பிராந்தியத்தைப் பரந்த மோதலுக்குத் தள்ளுகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

பாதுகாப்பு கவலைகள் உண்மையானவை என்றாலும், இறையாண்மையை மீறும் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்கும். ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். வன்முறையைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் கட்டுப்பாடும் மட்டுமே அமைதிக்கான ஒரே வழியாகும். இந்தியா தார்மீக ரீதியாகத் தெளிவாக இருக்க வேண்டும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகப் பேச நமக்குத் தைரியம் இருக்க வேண்டும்.

நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மை மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் வேரூன்றியுள்ளது. அது நிலையானதாக இருக்க வேண்டும். இந்த வன்முறையை தீர்க்க பிரதமர் மோடி பேச வேண்டியது அவசியம்.மவுனம் காப்பது ஏன்? உலக ஒழுங்கை வரையறுக்க நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வதை அவர் ஆதரிக்கிறாரா” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *