கியாஸ் தட்டுப்பாடு பிரச்னை… 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை திறந்த மத்திய அரசு!

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈரான் மீது கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஈரான் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை
ஈரான் மூடிவிட்டது.

எரிபொருள் தட்டுப்பாடு
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 3.3 கோடி டன் எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. இதில் 87 சதவீதம் வீட்டு சமையலறைகளிலும், மீதமுள்ளவை ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எல்பிஜி மொத்த தேவையில், 62 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எல்பிஜி. இறக்குமதி 90 சதவீதம் வரை பாதித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

கட்டுப்பாட்டு அறை
இந்த நிலையில், கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை கண்காணிக்க இரண்டு அமைச்சகங்கள் இணைந்த 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களின் செயலாக்க அதிகாரிகள் கொண்ட இந்த கட்டுப்பாட்டு அறையை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாறை அறை மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு கண்காணிக்க உள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களின் செயலாக்க அதிகாரிகள் கொண்ட இந்த கட்டுப்பாட்டு அறையை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கியாஸ் தட்டுப்பாடு பிரச்னை குறித்து உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *