
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.203 உயர்ந்துள்ளது. இதனால் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ2043.50-ல் இருந்து ரூ2246.50 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல், டீ கடைகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் வேலையிழப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (ஏப்ரல் 1) அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல், டீ கடைகளில் மீண்டும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



