மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்… தகாத உறவை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்

கைது செய்யப்பட்ட மருமகள் ரஞ்சனா, அவரது காதலன் ராஜன்.

தகாத உறவை தட்டிக் கேட்டதால் காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நிஷாட்கஞ்ச் பகுதியில் இரண்டு அடுக்கு மாடிக் கொண்ட வீட்டின் தரைத்தளத்தில் நிர்மலா தேவி (69) தனது மகன் திரிதேஷ், மருமகள் ரஞ்சனா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜன் என்பவர் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நிர்மலா தேவி வீட்டில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை அவரது பேரன் ஆதித்யா(14) பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக தனது தந்தைக்கு அவர் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற் குவிரைந்து வந்த திரிதேஷ், தனது தாயின் கை, கால்கள் கட்டப்பட்டதுடன், கழுத்தில் காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நிர்மலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டனர். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, நிர்மலா தேவியியை அவரது மருமகள் ரஞ்சனாவும், மேல் தளத்தில் வசித்து வந்த ராஜனும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ரஞ்சனாவுக்கும், மேல் மாடியில் வசித்து வந்த ராஜனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. திரிதேஷ் வேலைக்குச் சென்ற பிறகு ரஞ்சனாவும், ராஜனும் சந்தித்து வந்தனர். இதைக் கண்ட ரஞ்சனாவின் மாமியார் நிர்மலா தேவி இந்த தொடர்பை கண்டித்துள்ளார். ரஞ்சனாவின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரிந்து அவர்களும் கண்டித்துள்ளனர். ஆனாலும், ராஜனுடனான தொடர்பை ரஞ்சனா விடவில்லை. அத்துடன் ரஞ்சனாவிற்கும், அவரது கணவர் திரிதேஷிக்கும் இந்த பிரச்னையால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மகனுக்கு ஆதரவாக நிர்மலா தேவி பேசியுள்ளார். இதனால் ரஞ்சனா ஆத்திரமடைந்துள்ளார்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு முன்பு நிர்மலா தேவிக்கும், ரஞ்சனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கான உணவை தானே சமைத்துக் கொள்வதாக நிர்மலா தேவி கூறியுள்ளார். தினம், தினம் மாமியாரால் பிரச்னை வருவதால் அவரை கொலை செய்ய ரஞ்சனாவும், அவரது காதலன் ராஜனும் முடிவு செய்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது நிர்மலா தேவியின் கை, கால்களை கட்டிப் போட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அத்துடன் அவரது நகைகளைத் திருடி மறைத்து வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது உண்மையை ஒப்புக்கொண்டனர். அவர்களை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். தகாத உறவை கண்டித்த மாமியாரை காதலனுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்த சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *