இந்தியா முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது இ – 20 பெட்ரோல்!

இந்தியா முழுவதும், இன்று முதல் ‘இ – 20 பெட்ரோல்’ எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியால் பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில…
வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கவும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக, இந்தியா முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட ‘இ – 20 பெட்ரோல்’ விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் எண்ணெய் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, மாசுபாட்டைக் குறைத்து, கரும்பு உள்ளிட்ட விவசாயப் பயிர்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. பெரும்பாலான நவீன வாகனங்கள் இதைப் பயன்படுத்தலாம், ஆனால் பழைய வாகனங்களில் லேசான செயல்திறன் குறைவு ஏற்படலாம். விற்பளை செய்யப்படும் பெட்ரோல் குறைந்தபட்சம் ’95 ஆராய்ச்சி ஆக்டேன் எண்’ (ஆர்ஓஎன்.) தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *