
அருணாச்சல பிரதேசம் காமெங்கில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு காமெங் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியில் இன்று (மார்ச் 9) அதிகாலை 1.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 2.7 அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலா அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.



