பாஜகவின் தேர்தல் சதியை அம்பலப்படுத்துவேன்… மம்தா பானர்ஜி ஆவேசம்

வங்காள வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் தேர்தல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, உள்ளிருப்பு போராட்டத்தை இன்று (மார்ச் 6) தொடங்கியுள்ளார். தீவிர வாக்காளர் சேர்ப்பு (எஸ்ஐஆர்) பணிகள் தொடங்கிய 2025 நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து சுமார் சுமார் 63.66 லட்சம் பெயர்கள், அதாவது வாக்காளர்களில் 8.3 சதவீதத்தினர், நீக்கப்பட்டுள்ளனர், இதனால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 இலிருந்து 7.04 கோடியாக குறைந்துள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய கொல்கத்தாவின் பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய உள்ளிருப்பு போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான முறையான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்ககூடிய அரசியல் ரீதியாக நோக்கம் கொண்ட ஒரு பயிற்சியை தேர்தல் ஆணையத்தின் ஒரு குழு மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

வங்காள வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் தேர்தல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதாக, மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநில வாக்காளர்களின் வரையறைகளை கணிசமாக மாற்றியமைத்த தீவிர வாக்காளர் சேர்ப்பு (எஸ்ஐஆர்) பணிகளுக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, மம்தா மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் அந்த மாநில அரசியலின் வெப்பத்தை .கூட்டியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *