
தமிழ்நாட்டில் விஜய் வருகையால் திமுக தான் பயப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தையிலும், தொகுதி பங்கீட்டிலும் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், திடீரென திமுகவையும் விமர்சனம் செய்துள்ளார். இதனால் தவெகவையும், அக்கட்சி தலைவர் விஜய்யையும் அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய நிதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் விஜய் வருகையால் பயப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , “விஜய்யைப் பார்த்து திமுகதான் பயப்பட வேண்டும். திமுக பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் இலவசங்களை திமுக அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்., ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைக் கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது” என்றுபதிலளித்தார்.



