
நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் 6 நாட்களில் ரூ.207 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.
நடிகர் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்ரமணியன், ஸ்வாசிகா, ஷிவாதா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘கருப்பு’, ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ. 207 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.



