‘ஒரே வார்த்தையில் சொல்லவா?’:மு.க.ஸ்டாலின் நறுக் பேட்டி

இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வியில் வெற்றி கிடைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் 2 இடத்திலும், கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி குறித்து சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இன்று (அக்.10) வினா எழுப்பினர். அப்போது அவர், “ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி; தவெகவைப் பொறுத்தவரை வெற்றியிலும் தோல்வி” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *