சர்வதேச விமான நிலையமாகிறது மதுரை…மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலைய ஓடுபாதை நீட்டிக்கப்படும். புதிய முனையம் அமைக்கப்படும்.

மேலும் ,6 திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது து 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கான ஆலோசனை நடைபெற்றது. அதில் ஜல் ஜீவன் திட்டம் 2.0, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல், மேற்கு வங்கத்தில் சந்திராகாச்சி- கராக்பூர் நான்காவது ரயில்வே பாதை, சைந்தியா- பாகுர் மூன்றாவது பாதை, மத்தியப் பிரதேசத்தில் பத்னாவார் தண்ட்லா- திமார்வானி 4 வழி நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *