20 ஆண்டு முதல்வர் பதவியை துறக்கும் நிதீஷ் குமார்… எம்.பியாகிறார்!

மகன் நிஷாந்த் குமாருடன் பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார்.

பிஹாரில் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ள நிதீஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், சுமாா் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ள நிதீஷ் குமாா் தனது பதவியைவிட்டு விலகி, மாநிலங்களவை எம்.பி. பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்கு 5 புதிய எம்.பி.க்களை தோ்வு செய்ய தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மாா்ச் 5) நிறைவடைகிறது. இதில், ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ள நிலையில், பாஜக சாா்பில் அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட இரு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். ஜேடியு சாா்பில் இரு வேட்பாளா்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடா்பான அறிவிப்பை ஜேடியு இன்று வெளியிட இருப்பதாகவும், அப்போது நிதீஷ் குமாரின் பெயரும் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது 75 வயதாகும் நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கு சென்றால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார். அப்படி அவர் ராஜினாமா செய்த பின் மாநிலத்தின் முதலமைச்சராக துணை முதலமைச்சர்களாக இருக்கும் பாஜகவின் சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோரில் ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நிதீஷின் முதலமைச்சர் பதவிக்கு அவர் மகன் வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிஹார் அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், நிதீஷ் குமாா் முதலமைச்சத்ர பதவியை பாஜகவிடம் அளிக்க முடிவு செய்துள்ளாா். இதன்மூலம் பிஹாரில் பாஜகவைச் சோ்ந்தவா் முதல்முறையாக முதலமைச்சராக போகிறார். மாநிலங்களவைத் தோ்தல் முடிந்த மாா்ச் 16-ம் தேதிக்குப் பிறகு, நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அமைச்சரவையில் சோ்க்கப்படுவார். அவருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படஉள்ளது என்று தெரிவிக்கின்றன. மாநிலங்களவை தேர்தலுக்கு நிதீஷ் குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ள பாட்னாவுக்கு வருமாறு ஜேடியு மூத்த தலைவா்களுக்கு அக்கட்சியிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *