மலைப்பகுதியில் ரூ.275 கோடி மதிப்புள்ள அபின் விவசாயம்:போலீஸார் ஷாக்!

உதய்பூரில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட அபின் விவசாயம்.

ராஜஸ்தானில் ரூ.275 கோடி மதிப்பிலான 170 ஏக்கர் அபின் தோட்டத்தை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா தாலுகாவில் உள்ள சமோலி, குனா மற்றும் பிப்லி ஆகிய தொலைதூர பழங்குடியினர் மற்றும் மலைப்பகுதிகளில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), ராஜஸ்தான் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு (ஏன்டிஎஃப்) மற்றும் மாநில காவல்துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைக்குழு சோதனையில் ஈடுபட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட அபின் விவசாயம்.

அப்போது 170 ஏக்கர் பரப்பளவில் அபின் சாகுபடி செய்யப்பட்டதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்திய அளவில் அதன் மதிப்பு ரூ.275 கோடியாகும். இதையடுத்து அந்த அபின் தோட்டத்தை அழித்தனர்.

இது தொடர்பாக உதய்பூர் மாவட்ட எஸ்.பி நரிந்தர் சிங் கூறுகையில், ” மகாராஜா ரஞ்சித் சிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன் ஒரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது, அங்கு ஸ்விஃப்ட் காரில் வந்த இருவரை சோதனை செய்த போது அவர்களிடம் 4 கிலோ அபின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ஜக்சிர் சிங் சீரா மற்றும் மகேந்திர சிங் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த போது அபினை ராஜஸ்தானில் இருந்து கொண்டு வந்ததாகவும், பதிண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் சப்ளை செய்ததாகவும் கூறினர். இதையடுத்து ராஜஸ்தானில் உதய்பூர் மாவட்டத்தில் சோதனை செய்த போது 175 ஏக்கரில் அபின் சாகுபடி செய்யப்பட்ட தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *