
பிரதமர் மோடியை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 மில்லியன்.
உலக அரசியல் தலைவர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்டவராக பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராமில் 2014-ம் ஆண்டு இணைந்தார். உலக நாடுகளின் தலைவர்களை ஒப்பிடுகையில் இந்திய பிரதமர் மோடியை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது. அதன்படி இன்ஸ்டாகிராமில் சுமார் 100 மில்லியன் (10 கோடி) பின் தொடர்பவர்கள் என்ற முதல் அரசியல்வாதி என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் பட்டியலில் உள்ளனர். துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர்.



