
பிரதமர் நரேந்திர மோடி.
அனைவருக்கும் மகிழ்ச்சி மழையைப் பொழியட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று (மார்ச் 4)நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை புதிய ஆற்றலைச் சூழ்ந்துள்ளது, இதுவே அதன் மிகப்பெரிய சிறப்பு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “என் சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஹோலி வாழ்த்துக்கள். வண்ணங்களாலும், உற்சாகத்தாலும் நிறைந்த இந்தப் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி மழையைப் பொழியட்டும். ஒவ்வொரு வாழ்க்கையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியின் வண்ணங்களால் தெளிக்கப்படட்டும். இதுவே எனது மனமார்ந்த விருப்பம்,” என்று பதிவிட்டுள்ளார்.



