இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மத்திய உள்துறை அமைச்சக அலுவலகம்.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, அவரது குடும்பத்தினர், ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது

இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *