பட்டப்பகலில் பயங்கரம்… 20 முறை கத்தியால் குத்தி இளைஞர் கொடூரக் கொலை


பட்டப்பகலில் பயங்கரம்... 20 முறை கத்தியால் குத்தி இளைஞர் கொடூரக் கொலை

முன்விரோதம் காரணமாக 20 வயது இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியதுடன் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி பகுதியில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தாராவியைச் சேர்ந்த அஸ்வின் சிவக்குமார் (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக் ஆசிம் அக்தர். இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், தாராவி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வினை, ஆஷிக் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வின் 20 முறை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினின் கழுத்தை ஆஷிக் அறுத்துள்ளார். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தை பார்த்து அவ்வழியாக வந்தவர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அவர்களை கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவதாக ஆஷிக் மிரட்டியுள்ளார்.

அத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வின் அருகே கத்தியின் அமர்ந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாராவி போலீஸார் விரைந்து வந்து ஆஷிக்கை கைது செய்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஸ்வின் சிவக்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தினர். அப்போது அஸ்வினுக்கும்,இ ஆஷிக்கிற்கும் நீண்ட காலமாக மோதல் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், ஆஷிக் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரிய வந்தது. தாராவியில் பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *