விஜய் கடைசி படத்திற்கு இந்த கதியா?… ‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமம் கேன்ஸல்

தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் படத்திற்கான ஓடிடி உரிமத்தை அமேசான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். இதனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரான ஜன நாயகன் படம் கடைசி என்று அறிவித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படத்தை. கே.வி.என் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்யின் கடைசி படம் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு, அரசியல் வசனங்கள் என அதிரடியாய் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், மார்ச் 9-ம் தேதி நடக்க இருந்த மறுதணிக்கையும், அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. , முன்னணி ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ இந்தப் படத்தை வாங்கியிருந்தது.

திடீரென 120 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த படத்திற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் மட்டுமின்றி ஜன நாயகன் படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவும், திரையரங்கு வெளியீடு தாமதம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு மே மாதத்திற்குப் பின்பே படம் என்று கூறப்பட்டு வருவதால் ரூ.120 கோடிக்கு வாங்கிய ஓடிடி உரிமத்தை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *