
இன்று நடைபெற்ற 98வது ஆஸ்கர் விழாவில் ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.
திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கர் அகாடமி விருதுகள் கருதப்படுகின்றன. 98-வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று (மார்ச் 16) வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது
‘ஒன் பேட்டீல் ஆஃப்டர் அனதர்’ திரைப்படம் வென்றது. மேலும், அப்பத்தின் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை, ‘சின்னர்ஸ்’ படத்திற்காக மைக்கேல் பி.ஜோர்டான் வென்றுள்ளார். சிறந்த அசல் திரைக்கதை விருது இயக்குநர் ரயான் கூக்ளருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதினை ‘ஹாம்னெட்’ படத்திற்காக ஜெஸ்ஸி பக்லே பெற்றுள்ளார். சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது நார்வே நாட்டின் திரைப்படமான ‘சென்டிமென்ட்டல் வேல்யு’ படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதினை, ‘சின்னர்ஸ்’ படத்திற்காக ஆட்டம் டுரால்ட் அர்கபவ் பெற்றார். சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை ‘ஒன் பேட்டீல் ஆஃப்டர் அனதர்’ படத்திற்காக ஆண்டி ஜர்கென்சன் பெற்றுள்ளார். அதேபோல், சிறந்த ஒலிப்பதிவிற்கான ‘எஃப் 1’ படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த அசல் பாடல் பிரிவில் லுட்விக் கோரன்சன் தனது இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் வென்றார். இதன்மூலம் சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.




Thank for this information.Yes but one battle after another got 6 oscars