
கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தி மாணவர்களை திரட்டி இயக்கம் நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழுக் கூட்டம். மதுரை மாவட்ட அலுவலகத்தில் முனைவர் அந்தோனி பால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கம் முதலே நீட் தேர்வு பல குளறுபடிகளாலும் மோசடிகளாலும் அரங்கேறி வருகிறது. இந்த வருடம் அது உச்சக்கட்டத்திற்கே சென்று வினாத்தாள் இந்தியாவின் பல பகுதிகளில் கசிவு ஆகி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ஜூன் மாதம் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு கவலையையும் தோல்வி மனப்பான்மையையும் உருவாக்கி உள்ளது. சிலர் இதனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. எனவே இந்த வருடம் மருத்துவ சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தும்படியும் எதிர்காலத்தில் நீட் தேர்வை ஆய்வுக்கு உட்படுத்தி சட்டப்பூர்வமாக ரத்து செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறது.
மதுரை மாநகர் திடக் கழிவு மேலாண்மையில் மிகவும் பின் தங்கியுள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் யாவை என ஆராய்வதற்கு “மாசில்லா மதுரை மாநகர்” என்பதை வலியுறுத்தி செப்டம்பரில் மதுரையைச் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து விஞ்ஞானிகள் மாநாடு நடத்துவது என தீரமானிக்கப்பட்டுள்ளது. தொல்லியலாளர் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு அங்கீகரிக்காமல் நிராகரித்து காலம் தாழ்த்துவதை ஏற்கெனவே விஞ்ஞானிகளிடம் ஆன் லைன் வழியாகக் கையெழுத்து வாங்கி கருத்தரங்கமும் நடத்தினோம். தற்போது இதற்கான இயக்கத்தை கல்லூரி மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.



