விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: ஆர்.பி.உதயகுமார் மீது தவெக புகார்

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது தூத்துக்குடி எஸ்.பி.அலுவலகத்தில் தவெக புகார் மனு அளித்துள்ளது.

கடந்த 8-ம் தேதி தூத்துக்குடியில் ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூடடத்தில் பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர், “ விசு​வாசம் என்​றால் என்ன தெரி​யு​மா, கொடி பறக்கும்​போது கைதட்​டு​வது அல்ல. அந்​தக் கொடி பறப்​ப​தற்கு யார் இடையூறாக இருந்​தா​லும், அந்தக் கையை எடுத்​து​விட்டு கொடியை பறக்க விடு​வது​தான் விசு​வாசம். அதி​முகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்​கிறான். அதி​முகவை யாரேனும் அழிக்க நினைத்​தால், அவர்களின் வம்​சமே நாச​மாக போகும். மேலும் காவிரி தண்​ணீரை பற்றி பேசி​னால், காவிரி​யா​வது தண்ணி​யா​வது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசி​யது என்று தவெக​வினர் கேட்​கிறார்​கள்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலை​யில், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக மாவட்ட தவெக பொருளாளர் அருண்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், “ முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார், தமிழக முதலமைச்சர் குறித்து தரக்​குறை​வாக​வும், ஒரு​மை​யிலும் பேசி​யுள்​ளார். இது தவெக தொண்​டர்​கள் மத்​தி​யில் மிகுந்த அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவதூறு கருத்​துகளை​ அவர் தெரிவிக்​காத வகை​யில் சட்​ட நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஏற்கெனவே முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மீது தவெக அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதும் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசினார் என்று தவெக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *