மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி நடக்கிறது. இதற்காக சென்னையில் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மாலை 4.10 மணிக்கு சென்னை சென்ட்ரல்- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மறுநாள் (செப்டம்பர் 17) காலை 4.30 மணிக்கு மதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மதுரையில் இருந்து செப்டம்பர் 17-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 18) அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும் தாம்பரம் – மதுரை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 16-ம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 17) காலை 5.00 மணிக்கு மதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து செப்டம்பர் 17-ம் தேதி இரவு 7.00 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 18) அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

சென்னை கடற்கரையிலிருந்து செப்டம்பர் 16-ம் தேதி காலை 10.45 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை – மானாமதுரை மெமு ரயில் அதே நாள் இரவு 11.30 மணிக்கு மானாமதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து செப்டம்பர் 17-ம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு ரயில் புறப்பட்டு,

அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலில் 12 முன்பதிவில்லா மெமு பெட்டிகள் இணைக்கப்படும். மேற்கண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8.00 மணிக்குத் தொடங்கும். கும்பாபிஷேக விழாவிற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்தச் சிறப்பு ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *