திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததுடன் உடல்நலனும் தேறியிருந்தார். கட்சிப்பணி, சட்டப்பேரவை பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், துரைமுருகனுக்கு இன்று (அக்.10) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *