
மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற எமர்ஜென்சியை அமல்படுத்துவதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியை ஏற்றியதற்காகவா சிறையில் அடைத்தீர்கள் ? என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் இருவருக்கும் 5 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த தவறு ஜந்தர் மந்தரில் மூவர்ண கொடியை ஏற்றியதா? எதிர்ப்பை நசுக்க வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமாக எமர்ஜென்சியை அறிவியுங்கள், இப்படி கோழைத்தனமான வழிகளில் மறைந்து கொள்ளாதீர்கள்.
தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற எமர்ஜென்சியை அமல்படுத்துகிறது. சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை உடனடியாக விடுவிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்வியை அவராகவே எழுதிக் கொண்டிருக்கிறார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அதன் முடிவை எழுதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.



