
தவெக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அக்.31-ம் தேதி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் – ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப் பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக தவெக ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் தவெகவினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இந்த அரசு சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் அக்.31-ம் தேதி காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



