
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார்.
பாமக சார்பில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக மாநில அரசே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் சந்தித்தனர். சமூக நீதி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும்; அத்துடன் அதற்கான அறிவிப்பை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்த உள்ள உரையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாமக நடத்திய அனைத்துக்கட்சி தீர்மானத்தை முதலமைச்சர் விஜய்யிடன் பாமக தலைவர் அன்புமணி வழங்கினார்.



