ஜூலை 3-ம் தேதி ஆஜராக வேண்டும்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் செய்ததாக புகார் எழுப்பப்பட்டது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள், மின்னனு ஆதாரங்கள் மற்றும் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, தன்னிடமிருந்து முக்கிய ஆவணங்கள் அல்லது பணம் என எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்திருந்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரும் ஜூலை 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *