குறுக்கே வந்த டூவீலரால் பயங்கரம்… லாரி மீது கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

அரவக்குறிச்சி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மோதி கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். இந்த காரில் அரவிந்த், அவரது மனைவி ஜனனி, அவர்களின் மூன்று வயது குழந்தை துவிதா ஆகியோர் இருந்துள்ளனர். காரை ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த இன்று (ஜூலை 9) காலை 6.30 மணியளவில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல்நிலையத்திற்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் குறுக்கே டூவீலரில் வந்தவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். இதனால் அவர் மீது கார் மோதமல் இருக்க, அதன் டிரைவர் காரை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இதனால் லாரியின் பின்புறம் காரின் முன்பகுதி சிக்கிக் கொண்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அரவிந்த், அவரது மனைவி ஜனனி, கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் குழந்தை துவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த ஜனனி எட்டுமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *