ரூ.35 கோடி பேர விவகாரம்… செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதனால் திமக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சரானார். இந்த நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பின்புலமாக செயல்பட்டதாக கூறியதாக தெரிகிறது. மேலும் கைது செய்யப்பட்ட நரேசை சென்னையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சந்தித்து பேசியதன் அடிப்படையில் தவெக எம்எல்ஏ இளையராஜாவுடன் பேசியதாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸழரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *