
மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை ஆக.3-ம் தேதி, தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு வருகிறது. கடந்த
ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அதில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிட வேண்டும், மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவது தொடர்பான அம்மாநில அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது, புதிய நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்ற தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 20-ம் தேதி, மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய துறை வாரியான அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் ஜூன், ஜூலை மாதத்தில் பெய்யக்கூடிய பருவமழை ஏமாற்றியதால், அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அணைகளில் உள்ள நீர் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதால், தமிழ்நாடு விவசாய பாசனத்திற்கு நீரை திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமாரை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக கும்பகோணத்தில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை முறியடிக்கவும், தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெறவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில், முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.



