திடீரென விவசாயி வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்!

திடீரென விவசாயி வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்!

மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது திடீரென விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்ற தவெக தலைவர் விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று(செப்டம்பர் 1) தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது திடீரென சேலம் மாவட்டம், சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த மூதாட்டி முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார். அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து அந்த விவசாயியிடம் கேட்டறிந்தார். அத்துடன் அக்குடும்பத்தினருடன் கலந்துரையாடியதுடன், அவர்களுக்குப் பட்டு வேட்டி மற்றும் சேலைகளைப் பரிசளித்தார்,

அக்குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் விஜய்யுடன் கைகோர்த்து அவரை வழியனுப்பி வைத்தார். புறப்படும் முன், முதலமைச்சர் விஜய் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த கண்ணாடியைக் கழற்றி அந்த மூதாட்டிக்கு அணிவித்தார். இச்செயலால் மகிழ்ச்சியடைந்த அவர், ஊடகங்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தச் சிறப்பான பரிசைக் கண்டு ஆர்வமடைந்த அப்பகுதி இளைஞர்கள், அந்தக் கண்ணாடியை அணிந்து பார்க்கவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *