கோவை மாணவர் கொலை விவகாரம்: சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

கோவை மாணவர் அமுதா படுகொலை குறித்து உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில், கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக.17) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதங்கள் நடந்தன. அப்போது திமுக கொறடா எ.வ.வேலு, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அரசு சார்பில் உரிய பதில்கள் அளிக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இந்த அரசிடம் சரியான பதில் எதுவுமில்லை. மாறாக, எங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? என மீண்டும் எங்கள் மீதே குற்றச்சாட்டையும் பழியையும் போடும் வழக்கத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக நான் கூறி வருகிறேன், எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அரசை பற்றி ஏதேனும் விளக்கத்தை கேட்டால் எந்த அமைச்சரும் எழுந்து பதில் சொல்லலாம். அந்த அதிகாரம் அமைச்சர்களுக்கு உண்டு. ஆனால் இந்த அரசில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை.

இன்று சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்னைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முழுபொறுபேற்க வேண்டியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் இன்று அவைக்கு வரவில்லை. கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை. கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை. அதற்கான பதிலும் இல்லை. இதையெல்லாம் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *