
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வியாழனன்று முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று (செப்டம்பர் 7) மீண்டும் கூடியது. அவை கூடியதும், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை அளித்துப் பேசினார்.
அப்போது முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ததால் திமுகவுக்கு பேச அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார். இதனால் சபாநாயகர் இருக்கையை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டநிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



